வாழ்க்கையே போச்சு என கதறும் திருநங்கை.. கண்டு கொள்ளவில்லையா லாரன்ஸ்?

காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வு கதையை எடுத்த ராகவா லாரன்ஸ், ரொம்ப வித்தியாசமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா கேரக்டரின் நடித்த சரத்குமாரின் வளர்ப்பு மகளாக அந்த படத்தில் நடித்தவர் தான் திருநங்கை திவ்யா. இவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திவ்யா தன்னுடைய பேட்டியில் காஞ்சனா திரைப்படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், இந்த படத்தில் நடித்ததன் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்து விட்டதாக பலரும் நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடித்த பிறகு இவருக்கு வேறு எந்த வேலை வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்காமல் சாதாரணமாக இருந்திருந்தால் கூட எனக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது எந்த வேலை வாய்ப்புகளும் இல்லாமல், வருமானத்திற்கு ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறார் திவ்யா. இவர் மட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளுக்கும் இதுதான் நிலைமை. பொருளாதாரத்திற்காக அவர்களால் சாதாரண வேலை என்று எதிலும் இறங்க முடியாமல் இருக்கிறது.

உதவி தேவைப்படுபவர்கள், ஆதரவற்றவர்கள் எத்தனையோ பேர் ராகவா லாரன்ஸ் மூலம் நிறைய உதவியை பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவருடைய படத்தின் நடித்த திருநங்கை திவ்யாவிற்கு இப்படி ஒரு நிலைமை வந்தது லாரன்ஸ் இருக்கு தெரியுமா, திவ்யா அவரை அணுகி ஏதாவது உதவி கேட்டாரா, திவ்யா கஷ்டப்படுவது தெரிந்தும் ராகவா லாரன்ஸ் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா என்று நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

1newsnationuser1

Next Post

பக்ரித் பண்டிகை...! இன்று முதல் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

Wed Jun 28 , 2023
பக்ரித் பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது ‌ இது குறித்து விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்ட அறிக்கையில்‌, பக்ரீத் முன்னிட்டு இன்று சென்னையில்‌ இருந்தும்‌ மற்றும்‌ பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழ்நாடுமுழுவதும்‌ பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மூலம்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே […]
Diwali Bus

You May Like