75% பொது விநியோகத் திட்டப் பயனாளர்களுக்கு முகப்பதிவு அங்கீகாரம் வாயிலாக உணவு தானியங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.
நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், நியாய விலைக்கடைகளில் பயனாளிகளின் முக அடையாள அங்கீகார நடைமுறை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கடவுகளின் அடிப்படையில் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட:டு அவர்களது முகப்பதிவு அங்கீகார நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு இது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை மொத்தம் உள்ள 4.91 கோடி தகுதியுள்ள பயனாளிகளில் 3.69 கோடி பயனாளிகள் தங்களது முகப்பகுதி நடைமுறைகள் மின்னணு அடிப்படையிலான கேஒய்சி நடைமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்துள்ளனர்.
இந்த நோக்கத்தின் கீழ், குழந்தைகள் (6 மாதங்கள் முதல் 6 வயது வரை), கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பருவப் பெண்களுக்கு வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம் தலைமுறை தலைமுறையாக ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை முறியடிக்க தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை-II இல் உள்ள ஊட்டச்சத்து விதிமுறைகளின்படி துணை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஜனவரி 2023 இல் திருத்தப்பட்டுள்ளன.
பழைய விதிமுறைகள் பெரும்பாலும் கலோரி சார்ந்தவை; இருப்பினும், தரமான புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை வழங்கும் உணவு பன்முகத்தன்மையின் கொள்கைகளின் அடிப்படையில் துணை ஊட்டச்சத்தின் அளவு மற்றும் தரம் இரண்டின் அடிப்படையில் திருத்தப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.