1 மாதம் முன்னதாகவே ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..!

ration cad

தீபாவளி விடுமுறைக்கு பின்னர் நவம்பர் மாத ரேஷன் பொருட்களை இம்மாதமே வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், மற்றும் சில சமயங்களில் இலவசப் பொருட்களும் விநியோகிக்கப்படுகின்றன. ரேஷன் கார்டின் வகையைப் பொறுத்து, கிடைக்கும் பொருட்களின் அளவும் வகையும் மாறுபடும். மேலும், சில திட்டங்களின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முறையும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழக ரேஷன் கடைகளில் 2.25 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பச்சரி, புழுங்கல் அரசி இலவமாக வழங்கப்படுகிறது. அதன்படி முன்னுரிமை பிரிவுக்கு கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா கிலோவும், அந்தியோதயா பிரிவுக்கு தலா 35 கிலோவும், முன்னுரிமையற்ற பிரிவுக்கு தலா 20 கிலோவும் அரசி வழங்கப்பட்டு வருகிறது.. அனைத்து கார்டுதாரர்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம்..

இதனிடையே நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் உணவுத்துறை ஏற்கனவே அறிவித்தது.. அதன்படி தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கும் நவம்பர் மாதத்திற்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.. எனினும் இயந்திரக் கொளாறு காரணமாக சில பகுதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் தடைபட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு பின்னர் நவம்பர் மாத ரேஷன் பொருட்களை இம்மாதமே வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கனமழை எச்சரிக்கையை அடுத்து பொதுமக்களின் நலன் கருதி ஒரு மாதம் முன்னதாகவே ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. நவம்பர் மாதத்திற்கான அரிசி அந்தந்த பகுதி கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால் முன்னதாகவே ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்..

Read More : ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இனி ஆண்டுக்கு இரு முறை மட்டுமே… தமிழக அரசு புதிய திட்டம்..

English Summary

The Tamil Nadu government has announced that after the Diwali holidays, November ration items can be purchased this month itself.

RUPA

Next Post

Flash : கரூர் துயரம்.. ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கினார் விஜய்..!

Sat Oct 18 , 2025
Financial assistance was provided by the Thaweka to the families of those who died in the Karur tragedy.
vijay karur tvk

You May Like