’ரேஷன் கடைகளில் இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது..!! மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.


நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

’ரேஷன் கடைகளில் இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது..!! மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சி..!!

இந்நிலையில், தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது மக்களுடைய தேவையை கருத்தில் கொண்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், இந்த திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நிதி ஆயோக் அதிகாரிகள் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளதால் இத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

CHELLA

Next Post

நீதிமன்ற தீர்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து உருட்டிய யூடியூப் சேனல்கள்..!! மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!

Wed Dec 21 , 2022
இந்தியாவில் 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய இந்த 3 யூடியூப் சேனல்களும், உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய […]
best vpn for youtube thumb800

You May Like