திரும்ப பெறப்படும் 2,000 ரூபாய் நோட்டுகள்…! ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

இந்திய ரிசர்வ் வங்கி, மே மாதத்தில் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி மே மாதம் அறிவித்தது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதி வரை எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

Vignesh

Next Post

முகம் பளபளக்க வீட்டிலேயே தயாரிக்கலாம் Face cream!… இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!

Fri Aug 4 , 2023
இளம் வயது பெண்களுக்கு இருக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் முகப்பருக்கள், முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் வந்து சென்ற தழும்புகள், முகம் கருமையாக காணப்படுவது, டார்க் ஸ்பாட் போன்றவைகளால் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்து முகம் பொலிவுடன் காணப்பட வீட்டிலேயே இயற்கையாக செய்யக்கூடிய Face cream இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஊற வைத்த பச்சரிசி, ஊற வைத்த பச்சைப்பயிறு, கற்றாழை ஜெல், பாதாம் ஆயில். […]

You May Like