தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை.
ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை பாதுகாப்பாக வெளியே வர வைத்தார்.. இது அங்குள்ள உள்ளூர்வாசிகளிடமிருந்து அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றது. இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது.
முதலில் குழந்தையை காரில் இருந்து வெளியே வரவழைப்பதற்கான அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் தோல்வியடைந்தன. துயரத்திலும் குழப்பத்திலும் இருந்த சிறுமி காருக்குள் சிக்கிக் கொண்டார்.. குடும்பத்தினரும் உள்ளூர்வாசிகளும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து பயந்து, மேலும் மேலும் பதட்டமடைந்தனர்.
அப்போது, ஒரு இளைஞர் வழக்கத்திற்கு மாறான தீர்வை கண்டுபிடித்தார்.. தனது மொபைல் போனைப் பயன்படுத்தி, உள்ளே இருந்து காரை எவ்வாறு திறப்பது என்பதைக் காட்டும் வீடியோவை குழந்தைக்கு காட்டினார்.. வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி கதவை திறக்கும் படி குழந்தையை ஊக்குவித்தார்..
அந்த வீடியோவை பார்த்த குழந்தை அதன்படியே, குழந்தை காரின் கதவை திறந்தது.. குழந்தை காயமின்றி வெளியே வந்தபோது கூட்டத்தினரிடையே கைதட்டல் எழுந்தது.
சரியான நேரத்தில் மன உறுதி உடனும், சாதூர்யமாகவும் குழந்தையை காப்பாற்றிய அவரை பொதுமக்கள் பாராட்டினர். “அவரது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தது,” என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.