பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி!! விலை என்ன தெரியுமா?

இந்தியாவில் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில் ரியல்மி P1 புரோ ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

பட்ஜெட் விலையில் தரமான சிறப்பம்சங்களை வழங்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ரியல்மி நிறுவனமும் ஒன்று. தற்போது நல்ல கேமரா வசதியுடன், சிறந்த பெர்பார்மென்ஸ் கொண்ட ரியல்மி P1 புரோ என்ற மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. P சீரிஸ் போன்களின் வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது.

Realme P1 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் :

  • 6.67 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் சோனி LYT600 கேமரா 
  • 8 மெகாபிக்சல் போர்ட்ரைட் கேமரா பின்பக்கம்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 சிப்செட்
  • 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

இந்த போனின் தொடக்க விலை ரூ.21,999 முதல் தொடங்குகிறது. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது

Next Post

T20 World Cup 2024: 'டி20 உலக கோப்பையில் இடம் பெறுவாரா ஹர்திக் பாண்டியா.?"… ரோஹித் சர்மா தலைமையில் அவசர ஆலோசனை.!!

Tue Apr 16 , 2024
T20 World Cup: வருகின்ற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவது கேள்விக்குறியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய அணியின் முன்னணி வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2023 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து […]

You May Like