தொலைத்தொடர்ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு… டிசம்பர் 29-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…!

Central 2025

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) 22-ம் தேதிக்குள்ளும் எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் முறையே இம்மாதம் (டிசம்பர் 2025) 15-ம் தேதி மற்றும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை மின்னணு முறையில் ட்ராய் அமைப்பின் (வலைதளம், அலைக்கற்றை, உரிமம்) ஆலோசகர் சமிர் குப்தாவிற்கு adv-nsll@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அதன் நகலை ja2-nsl2@trai.gov.in என்ற முகவரியிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள் மற்றும் தகவல்களை பெற ட்ராய் ஆலோசகர் சமிர் குப்தாவின் தொலைபேசி எண்ணை (+91-11-20907752) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இளநீரின் நன்மை தெரியும்.. ஆனால் அதை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா..? - ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா விளக்கம்..

Tue Dec 9 , 2025
We know the benefits of fresh water.. but do you know who shouldn't drink it..? - Nutritionist Shwetha explains..
AA1JCOkm

You May Like