தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் நவம்பர் 6-ம் தேதி காலை 10.30 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது.



