மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.. இன்று நடைபெறும் திறனாய்வுத் தேர்வு…!

money School students 2025

இன்று நடைபெறும் ஊரக திறனாய்வுத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது ஆணையம்.


ஊரக திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது, முதன்மை மற்றும் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு இன்று காலை 10 முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகள் தேர்வுத் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் காலை 9.30 மணிக்கு தங்களுக்கான தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஹால் டிக்கெட் மற்றும் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களை ஒப்பிட்டுப் பார்த்து தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வினாத்தாள் புத்தகத்தில் விடைகளை குறிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

Vignesh

Next Post

தங்கம் விலை தடாலடி சரிவு..!! இனிமே இப்படித்தான் இருக்குமாம்..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

Sat Nov 29 , 2025
கடந்த சில நாட்களாக உலக அளவில் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. இந்தப் போக்கு, இந்தியாவிலும் தங்கம் விலை குறைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $46 குறைந்து, தற்போது $4,111-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை இறக்கமே, உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து, இன்று தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்ற […]
Gold jewels new

You May Like