வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் மகளிர் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூலம் 2025-2026-ம் நிதி ஆண்டில் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு வணிக ரீதியிலான இயந்திரங்கள் பெற 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1 லட்சத்தி 20 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுடைய பெண்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Read more: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!