முன்னணி பொதுத்துறை வங்கி, கனரா வங்கி, ‘அப்ரண்டிஸ் சட்டம், 1961’ (Apprentices Act, 1961) இன் கீழ் 2025-26 நிதியாண்டுக்கான பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் 3500 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20-28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Sc/st/மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு, அதேபோல பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 3 ஆண்டும் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டும்,விதவைகள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மற்றும் கணவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பெண்கள், மறுமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு வகுப்புகள் வாரியாக 35-40 வயது வரை வயது தளர்வு உண்டு.
உதவித்தொகை: பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ₹15,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற அப்ரண்டிஸ் போர்ட்டலில் பதிவு செய்து, தங்களுடைய விவரங்களை 100% பூர்த்தி செய்திருக்க வேண்டும். போர்ட்டலில் விவரங்களைப் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே வங்கிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
Read more: பெண் ஆட்டோ ஓட்டுநருடன் முன்பகை.. வீடு புகுந்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்..!! கரூரில் பகீர்..