மத்திய அரசின் தபால் நிலையங்கள் வழங்கும் RD (Recurring Deposit) சேமிப்புத் திட்டம், குறைந்த தொகையிலேயே அதிக வருமானம் பெற விரும்புவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமும் சிறிய தொகை சேமித்தாலே, எதிர்காலத்தில் பெரிய தொகையைப் பெறலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பு.
தபால் துறை வழங்கும் இந்த RD கணக்கை மாதம் ₹100 முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்போது இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 6.7% கூட்டுத்தொகை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. அரசாங்கம் ஒவ்வொரு மூன்றுமாதங்களிலும் இந்த விகிதத்தை புதுப்பித்து வருகிறது. RD-யின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்; முதலீட்டாளர் விரும்பினால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதும் சாத்தியம்.
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.333 மட்டும் சேமிப்பது மாதத்திற்கு ரூ.10,000 வரை அதிகரிக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த வைப்புத்தொகை ரூ. 6,00,000. வட்டி ரூ. 1,13,659. மொத்தம் ரூ. 7,13,659 ஆகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த வைப்புத்தொகை ரூ. 12,00,000. வட்டி ரூ. 5,08,546. மொத்தம் ரூ. 17,08,546 பெறலாம். மாதத்திற்கு ரூ.5,000 மட்டுமே சேமிக்க முடிந்தாலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தம் ரூ.8.54 லட்சம் கிடைக்கும். இதில் ரூ.2.54 லட்சம் வட்டியும் அடங்கும்.
திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
- அரசு உத்தரவாதம் அளிக்கும் திட்டம் என்பதால் பணம் பாதுகாப்பானது.
- கணக்கு தொடங்கி ஒரு வருடம் கழித்து, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% வரை கடன் பெறலாம்.
- அவசர காலங்களில், முதிர்வுக்கு முன்பே கணக்கை மூடலாம். இருப்பினும், வட்டியில் சில விலக்குகள் இருக்கும்.
யார் முதலீடு செய்யலாம்? இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் தனித்தனியாகவோ அல்லது கூட்டுக் கணக்கு மூலமாகவோ முதலீடு செய்யலாம். குறைந்த அபாயத்துடன் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கும், எதிர்காலச் செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுவோருக்கும் இது சரியான தேர்வாகும். எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிப்பவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாகக் கூறலாம்.
Read more: அடிப்படை சம்பள வரம்பை அதிகரிக்க EPFO முடிவு..! உங்களுக்கு நன்மையா அல்லது இழப்பா? தெரிஞ்சுக்க இதை படிங்க..



