தூள்..! வெளிநாடு சென்று படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை…! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்…?

money 2025 2

முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க எதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ. 36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும் பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள். சமூக அறிவியல் நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 31.10.2025 ஆகும்.

Vignesh

Next Post

அறிவுக்கரசியிடம் வீடியோ மேன் போட்ட ரகசிய டீல்.. மண்டபத்தை விட்டு வெளியேறும் தர்ஷன்.. உச்ச கட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் தொடர்கிறது..!!

Thu Sep 25 , 2025
Evidence caught by the video man.. The knowledge-hungry man is trapped.. The counter-swim continues at the peak of excitement..!!
ethirneechal

You May Like