ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ரூ.37,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் 28.02.2026-க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே இத்திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறிஸ்துவ மக்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



