பட்டாசு விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..

MK Stalin dmk 6

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற முக்கியமான இடமாக திகழ்கிறது. சிவகாசி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் இத்தொழில் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.


பட்டாசு தொழில் மாநில பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வர்த்தகம் இந்தத் துறையில் நிகழ்கிறது. ஆனால், வருமானம் உயர்ந்திருந்தாலும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் நிகழ்கின்றன. இது தொழிலாளர்களின் உயிர்களையும், குடும்பங்களின் வாழ்வையும் பாதித்து வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் கீழகோதை நாச்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), மற்றும் சண்முகத்தாய் (60) ஆகிய மூன்று பெரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

மேலும், 90% தீக்காயங்களுடன் மாரியம்மாள் என்ற பெண் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மின்சார உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இந்தி வெடி விபத்து காரணமாக, சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக வீட்டின் உரிமையாளர் பொன்னுபாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த பட்டாசு வெடி விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சையில் இருக்கும் மாரியம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read More: 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி.. கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட சோகம்..

Newsnation_Admin

Next Post

“Sorry.. சரியா திருட முடியல..” பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட திருடன்.. வெகுமதியாக பணமும் பெற்றார்.. வேடிக்கை வீடியோ வைரல்..!

Sat Aug 9 , 2025
தாய்லாந்து திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயன்ற போது, அதில் தோல்வியடைந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் திருடிய நபருக்கு பண வெகுமதியும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், திருடன் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.. அந்தப் […]
Thief viral video

You May Like