ரூ. 500 கோடி பட்ஜெட்; ரூ. 300 கோடி நஷ்டம்!. யஷின் ‘டாக்சிக்’ படம் தியேட்டர்களில் இருந்து நீக்கம்!.

Toxic removed 30kb

பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படம், இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்கும் படமாக மாறி வருகிறது. இப்படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடி வரை நஷ்டம் அடையக்கூடும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆங்கிலப் பதிப்பு, கடந்த செப்டம்பர் 4 அன்று இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் முதல் வாரத்தில் இப்பதிப்பு வெறும் ரூ. 3.16 லட்ச மட்டுமே வசூலித்தது. மும்பை, பெங்களூரு, குர்கிராம் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் திரையிடப்பட்டாலும், நாளுக்கு நாள் இதன் வசூல் சரிந்து கொண்டே சென்றது.

குறிப்பாக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இதன் வசூல் வெறும் ரூ. 3,125 என்ற அதிர்ச்சிகரமான அளவிற்கு குறைந்தது. தொடர் தோல்வி மற்றும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தினால், செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் இருந்து இப்படத்தின் ஆங்கிலப் பதிப்பு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

ரூ. 300 கோடி வரை நஷ்டம் ஏற்படக் காரணம் என்ன?

சுமார் ரூ. 450 கோடி முதல் ரூ. 500 கோடி வரை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் தொடக்கத்தைப் பெற்றது. இருப்பினும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதால், இதன் மொத்த தியேட்டர் வசூல் சுமாராகவே முடிவடையும் என்று தெரிகிறது.

மேலும், பட வெளியீட்டிற்கு முன்பு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ. 150 கோடி வரை டிஜிட்டல் உரிமைத் தொகையாக வழங்க முன்வந்தது. ஆனால், படம் தியேட்டர்களில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர். தற்போது படத்தின் மோசமான வசூல் நிலவரத்தால், ஓடிடி நிறுவனங்கள் வெறும் ரூ. 30 கோடி வரை மட்டுமே விலை பேசுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, தயாரிப்புச் செலவு மற்றும் இதர செலவினங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ‘டாக்சிக்’ திரைப்படம் சுமார் ரூ. 300 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

உடற்பயிற்சி செய்கிறீர்களா? இளைஞர்களை தாக்கும் நுரையீரல் புற்றுநோய்!. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!

Sat Sep 12 , 2026
இளம் வயதினராக இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிக்காமல் இருப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், அது புற்றுநோயில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தராது. எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பவர்கள், தங்களுக்கு தீவிரமான நுரையீரல் புற்றுநோய் வராது என்று எண்ணி, தொடர் உடல்நலப் பிரச்சனைகளைப் புறக்கணிக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மும்பை சைஃபி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலால் இது குறித்துக் கூறுகையில், […]
Lung Cancer 30kb

You May Like