தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், பொறியியல், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், சுற்றுச்சூழலியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு ‘தமிழக அறிவியலறிஞர் விருது’ வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம், சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநிலமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், பொறியியல், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், சுற்றுச்சூழலியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு ‘தமிழக அறிவியலறிஞர் விருது’ வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம், சான்றிதழ்வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை (http://www.tanscst.nic.in/) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகம், சென்னை – 25’ என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பவேண்டும்.