UPSC மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை…! இன்று முதல் விண்ணப்பம்…!

money tn govt 2025

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது, யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில், நான் முதல்வன் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 87 பேர் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.

இதைத்தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி பெற ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். https://naanmudhalvan.tn.gov.in/ இணையதளம் மூலம் இன்று முதல் நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெருவில் பெரும் சோகம்!. பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் பலி!. பலர் படுகாயம்!

Thu Nov 13 , 2025
பெருவில் பிக்கப் டிரக் மீது பேருந்து மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். லாமோசாஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்து ஒன்று, காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்திலிருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரேக்விபாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெரு மற்றும் சிலியை இணைக்கும் பனமெரிக்கானா சுர் நெடுஞ்சாலையில் வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த பிக்கப் டிரக் மீது மோதியதில் பேருந்து அருகில் […]
peru bus crash

You May Like