Tn Govt: 58 வயது கடந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம்…! எப்படி பெறுவது…?

tn Govt subcidy 2025

விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றத்தில் வேண்டும்.

மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள். அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச /தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள். மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்.

2025 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். மாத வருமானம் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/- ஆக இருத்தல் வேண்டும் (இதற்கான 2025-ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும்) ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. விண்ணப்பித்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்த்திட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள் வயது மற்றும் அடையாள சான்றிதழ் (ஆதார்) பிறப்பிட சான்று, வருமான சான்று ஓய்வு பெற்றதற்கான விவரங்கள்.

முக்கிய தேதிகள் மற்றும் இடம்: இவ்வலுவலகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 31.07.2025 மாலை 5 மணி வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண்.7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட்நியூஸ்!. கடனின் அசல் தொகையை முன்கூட்டியே செலுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!. வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

Fri Jul 4 , 2025
அதிவட்டி விகிதத்தில் (floating interest rate) வழங்கப்படும் கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பும் தனிநபர் கடனாளர்களிடமிருந்து, வங்கிகள் முன்கட்டணத் தொகை அல்லது pre-closure charges எதையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிவட்டி விகித கடன்களில், முன்பணம் செலுத்தும் கடனாளர்களிடமிருந்து எந்தவிதமான அபராத கட்டணமும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் […]
Pre payment charges RBI 11zon

You May Like