போக்குவரத்து கழகத்தில் ரூ.9,000 ஊக்கத்தொகை…! 18-ம் தேதி வரை விண்ணப்பிக்லாம் என அறிவிப்பு…!

tn Govt subcidy 2025

போக்குவரத்து கழகங்​களில் ஊக்கத்தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்பயிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, எம்டிசி, எஸ்இடிசி ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 458 காலியிடங்களும், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 561 காலியிடங்களும், கலை, அறிவியலில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 569 காலியிடங்களும் உள்ளன.

2021 முதல் 2025-ம் ஆண்டு வரை பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வு முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், விவரங்களை https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் அக்.18-ம் தேதிக்குள் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் மத்திய அரசு சம்பளம்..!! இஸ்ரோவில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Oct 14 , 2025
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி (Physical Research Laboratory – PRL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் மற்றும் பிற தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம் : இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி […]
Govt Job 2025

You May Like