டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!. கிரெம்ளின் உறுதிப்படுத்தியது!.

Putin visit India 11zon

வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது.


சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஒன்றாம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப் பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது’ என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, இதில் முக்கியமானது என்னவென்றால், வரும் டிசம்பரில் நமது அதிபரின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதும் உறுதியாகி உள்ளது.

Readmore: ‘இயற்கை கூட கேலி செய்கிறது’!. வாகா எல்லையில் வெள்ளம் சூழ்ந்த பாகிஸ்தான் பகுதி!. வீடியோ வைரல்!. நெட்டிசன்கள் கிண்டல்!

KOKILA

Next Post

பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 டிசம்பர் 30 வரை விலக்கு...! மத்திய அரசு அறிவிப்பு...!

Sat Aug 30 , 2025
பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) […]
cotton 2025

You May Like