தமிழ்நாட்டில் நாளை முதல் S.I.R. தொடக்கம்.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

supreme court stalin

2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.


எனினும் SIR ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இது வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் சதிச்செயல் என்றும் திமுக தொடர்ந்து கூறி வருகிறது.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.. இதில் SIR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு தடை கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் “ பிகாரில் SIR குளறுபடி தொடர்பான வழக்கில் இறுதி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது..

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் SIR நடவடிக்கை ஏற்க முடியாது.. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலக்கட்டத்தில் பண்டிகைகள் வருவதால் சிரமம் ஏற்படும்.. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல்.. இதனால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானவர்களின் வாக்குகள் பறிபோகும்.. எனவே தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்..” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நவம்பர் 6 அல்லது 7-ம் தெதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : 2026 தேர்தல் : விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! மீண்டும் திமுக வெற்றி பெறுமா? கள நிலவரம் என்ன?

RUPA

Next Post

“ நெஞ்சே பதறுது.. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?” மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து விஜய் கேள்வி..!

Mon Nov 3 , 2025
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]
vijay stalin

You May Like