ஐயப்ப பக்தர்களே உஷார்!. மூளையை தின்னும் அமீபா பரவல் அபாயம்!. கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

brain eating amoeba 2

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. இதனால் ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை கோயிலுக்கு செல்வார்கள். இந்தநிலையில், சபரிமலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை – பிரசாத் நம்பூதிரி, மாளிகைபுறம் – மனு ஆகியோரை சன்னி தானம் முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனரரு இருவருக்கும் அபிஷேகம் செய்து மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து முறைப்படி அவர்களை மேல் சாந்திகளாக பதவியேற்க செய்வார்.


இன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து சன்னிதானத்திற்கும் தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. மண்டல காலத்துக்கு திரண்டு வரும் பக்தர்களை வரவேற்க சபரிமலை தயாராகி விட்டது. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் சில இடங்களில், ‘அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ என்ற நோய் பரவி வருகிறது. இது, மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. அதனால், கேரள சுகாதாரத்துறை, சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சபரிமலை வரும் வழியில், ஆறுகளில் குளிக்கும் போது, மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும். கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ள, அய்யப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Readmore: மருந்து இல்லாமல் குழந்தைகளை சளியிலிருந்து பாதுகாப்பது எப்படி?. 5 வீட்டு வைத்தியங்கள் இதோ!

KOKILA

Next Post

முட்டை விலை 595 பைசாவாக உயர்வு...!

Sun Nov 16 , 2025
நாமக்கலில் ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. 2024 டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 590 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே, […]
egg 2025 1

You May Like