போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்..!! ஊழியர்களுக்கு மின்வாரியம் பகிரங்க எச்சரிக்கை..!!

விபத்தில்லா மின்வாரியம் அமைந்திட, மின் ஊழியர் உயிர் காத்திட 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6% ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனே வழங்கிட வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மின் பழுது பார்க்கும் பணிகள் பாதிப்படையும் நிலை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள்ளாக தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.  

மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

CHELLA

Next Post

இனி வீட்டு வாசலில் இருந்து கொண்டே ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம்..!! எப்படி தெரியுமா..? அமேசானின் அசத்தல் அறிவிப்பு..!!

Wed Jun 21 , 2023
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்தது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2016இல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்ததைப் போல, நோட்டுகள் உடனடியாக நிறுத்தப்படாது என்றாலும், கரன்சி நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்வது மிகவும் கடினமான பணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் சமீபத்தில் […]
money

You May Like