Salary | இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கு சென்றால் அதிக சம்பளம் கிடைக்கும் தெரியுமா..? தமிழ்நாட்டில் எவ்வளவு..?

நம்மில் பலர் வேலைக்காக சொந்த ஊரையும், வீட்டையும், குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிவோம். ஏனென்றால், சொந்த மாநிலத்தில் அல்லது ஊரில் வேலை செய்யும்பொது நமக்கு அந்தளவு வருமானம் கிடைக்காது. வெளிமாநிலங்களில் வேலை செய்தால் அடிப்படை ஊதியத்தை தவிர, மற்ற கொடுப்பனவுகளும் நமக்கு கிடைப்பதால், நமது வருமானமும் அதிகரிக்கும்.

வெளிமாநிலத்தில் பணிபுரிய ஆசைப்படும் பலரின் தேர்வு பெங்களூரூ மற்றும் நொய்டாவாகத்தான் இருக்கும். ஏனென்றால், அங்கு வாழ்வாதாரத்திற்கான செலவுகள் அதிகம் என்பதால், அடிப்படை சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளை அதிகமாக வழங்கப்படும்போது நமக்கு அதிக சம்பளம் கிடைக்கும். ஒருவேளை, நீங்கள் வெளி மாநிலங்களில் வேலை செய்ய ஆசைப்பட்டால், எந்த மாநிலத்தில் வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730 வழங்கப்படுகிறது. இதுதான் இந்தியாவிலேயே அதிகபட்ச சராசரி மாதச் சம்பளம் ஆகும். இங்கு ஐடி மற்றும் செய்தி ஊடகங்களுக்கான வேலை வாய்ப்பு அதிகம். அடுத்ததாக மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,210 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு வேலைக்கான வாய்ப்புகள் குறைவு.

இந்த பட்டியலில் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.20,011. தொழிற்சாலைகள் தவிர, மகாராஷ்டிராவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு நல்ல வருமானம் தரும் திரைப்படத் துறையும் உள்ளது. நான்காம் இடத்தில் பீகார் உள்ளது. இங்கு தொழில் இல்லாததால் பீகாரில் உள்ள பெரும்பாலானோர் மாநிலத்தை விட்டு வெளியூர் சென்று வேலை பார்க்கின்றனர். இருந்த போதிலும், மாநிலத்தின் சராசரி மாத வருமானம் ரூ.19,960 ஆகும்.

அடுத்ததாக ராஜஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.19,740 ஆகும். மத்தியப்பிரதேசம் 6-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாத வருமானமும் ராஜஸ்தானைப் போலவே உள்ளது. தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.19,600. இந்தப் பட்டியலில் கர்நாடகா 8-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.19,150.

குஜராத் தொழில் மற்றும் வர்த்தகத்தில் 9-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.18,880 ஆகும். ஒடிசா பத்தாவது இடத்தில் உள்ளது. சராசரி மாத வருமானம் ரூ.18,790. மேலும் கேரளா 13-வது இடத்திலும், பஞ்சாப் 14-வது இடத்திலும், ஹரியானா 17-வது இடத்திலும் உள்ளன. மேலும் இந்த பட்டியலில் டெல்லி 19-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : Congress | பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! ஆண்டுக்கு ரூ.1 லட்சம்..!! காங்கிரஸ் கட்சியின் 5 முக்கிய வாக்குறுதிகள்..!!

Chella

Next Post

Vijay | நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த பிரபல நடிகரின் மகன்..!! யாருன்னு தெரியுமா..?

Wed Mar 13 , 2024
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல நடிகரின் மகன் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு என சுட்டிக்காட்டினார். இதனை ஒட்டியே, அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய். இந்நிலையில், புதிதாக உறுப்பினர் சேர்ப்பு அணியை அறிவித்த விஜய், அதற்கு நிர்வாகிகளையும் […]

You May Like