மாதம் ரூ.15000 சம்பளம் பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், கொப்பலில் உள்ள கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 24 வீடுகள், சுமார் 40 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.. கலக்கப்பா நிடகுண்டி என அடையாளம் காணப்பட்ட அந்த நபரின் மாத சம்பளம் ரூ.15,000 மட்டுமே, ஆனால் அவரது பெயரிலும் அவரது மனைவி மற்றும் சகோதரர் பெயரிலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
அரசியல் பதவிகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அறிவிக்கப்பட்ட வருமான ஆதாரங்களை விட அதிகமாக சொத்து குவித்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கர்நாடக லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனைக்குப் பிறகு இந்த பெரிய மோசடி அம்பலமானது.
முன்னாள் எழுத்தரின் வீட்டில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி அவருக்கு 24 வீடுகள், 4 நிலங்கள் மற்றும் 40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்ட ரூ. 30 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தன என்பது தெரியவந்தது. மேலும், கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் (350 கிராம்) மதிப்புள்ள தங்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளியும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. முன்னாள் எழுத்தர் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
முன்னாள் KRIDL பொறியாளர் ZM சின்சோல்கரின் உதவியுடன் ₹72 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக நிடகுண்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இருவரும் 96 முழுமையடையாத உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு போலி பில்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.. இந்த சோதனையின் ஒரு பகுதியாக, சிபிஐ பரசுராம் கவடகி தலைமையிலான லோக் ஆயுக்தா அதிகாரிகள் குழு, துணை எஸ்பி புஷ்பலதா மற்றும் அதிகாரி பிஎஸ் பாட்டீல் மேற்பார்வையில், ஆவணங்கள், பண இருப்பு மற்றும் சொத்து பதிவுகளை ஆய்வு செய்து வருகிறது.