மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்..! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..! முழு விவரம்…!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காலியாக உள்ள 2 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு வரும் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எஸ்பிஐ வங்கி மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும்.மேலும் இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று (ஏப்ரில் 18).

பணியிட விவரம் : டிசைன் இன்ஜினியர் ( மெக்கானிக்கல்) பணிக்கு 2 காலியிடங் உள்ளது. இதற்கான சம்பளம் மாதம் ஐம்பது ஆயிரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரொட்க்ஷன், உற்பத்தி, இண்டஸ்டீரியல் இன்ஜினியரிங் என ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை : நேர்முக தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : https://avnl.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ்களை சுய சான்றொப்பம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Works Manager, Admin, Engine Factory, Avadi, Chennai – 600 054

Kathir

Next Post

மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்கள்!… அமெரிக்க டைம் இதழ் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்!

Thu Apr 18 , 2024
Time Magazines: அமெரிக்காவின் டைம் இதழில் வெளியிடப்பட்ட மிகவும் செல்வாக்கு மிக்க பிரபங்களின் பட்டியலில் இந்தியாவின் பாலிவுட் நடிகை ஆலியா பட், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் பல்வேறு துறைகளை சார்ந்த மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர் பிரபலங்கள் பட்டியலில் ஆலியா பட் […]

You May Like