ஐடிபிஐ (IDBI)வங்கி ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.idbibank.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 21, 2023 அன்று தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 114 பணியிடங்கள் நிரப்பப்படும்.
காலியிட விவரங்கள் :
- மேலாளர்: 75 பதவிகள்
- உதவி பொது மேலாளர்: 29 பணியிடங்கள்
- துணை பொது மேலாளர்: 10 பணியிடங்கள்
விண்ணப்பக் கட்டணம் : பொது, EWS மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும், அதேசமயம் எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.200 கட்டணம் செலுத்தினால் போதும்.
சம்பளம் :
- துணைப் பொது மேலாளர்: கிரேடு ‘டி’ ரூ. 84,890 முதல் ரூ. 89,890 வரை
- உதவி பொது மேலாளர்: கிரேடு ‘சி’ ரூ. 63,840 முதல் ரூ.78,230
- மேலாளர்: கிரேடு ‘பி’ ரூ. 48,170 முதல் ரூ.69,810 வரை
தேர்வு நடைமுறை: விண்ணப்பப் படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வயது, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவற்றின் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களின் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செயல்முறை நடைபெறும்.. அசல் ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் idbibank.in (careers) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு விண்ணப்ப முறை ஏற்றுக்கொள்ளப்படாது.
IDBI ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு இதோ : https://www.idbibank.in/pdf/careers/Final-Detailed-Advt-Spl-23-24.pdf