மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை கீழ் செயல்படும் நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (NBCC) தற்போது பல பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணிவிவரம்:
ஜென்ரல் மேனேஜர் (சிவில்) – 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (சிவில்) – 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (நிதி) – 1
சீனியர் மேனேஜர் (சிவில்) – 2
சீனியர் மேனேஜர் (HRM) – 1
மேனேஜர் (நிதி) – 1
டெபியூட்டி மேனேஜர் (மெக்கானிக்கல்) – 1
டெபியூட்டி மேனேஜர் (Company Secretary) – 1
வயது வரம்பு:
- ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 49 வயது வரை இருக்கலாம்.
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவியில் சிவில் மற்றும் நிதி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயது வரை இருக்கலாம்.
- சீனியர் மேனேஜர் பதவிக்கு 41 வயது வரையும் இருக்கலாம். இதர பிரிவுகளுக்கு 33 வயது வரை இருக்கலாம்.
- சீனியர் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 41 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
ஜென்ரல் மேனேஜர் (General Manager)
- துறை: சிவில் பொறியியல்
- கல்வித்தகுதி: முழு நேர BE/B.Tech
- மதிப்பெண்கள்: குறைந்தபட்ச 60%
- அனுபவம்: அதிகபட்ச 20 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட அனுபவம்
டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் (Deputy General Manager)
- துறை: சிவில் / மெக்கானிக்கல் / CS / ICAI / ICWAI / MBA
- கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / சான்றிதழ் பூர்த்தி
- அனுபவ விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படும்
சீனியர் மேனேஜர் (Senior Manager)
- துறை: சிவில் பொறியியல் / MBA
- கூடுதல் தகுதி: 2 ஆண்டு மேலாண்மை சார்ந்த PG Diploma
மேனேஜர் (Manager)
- துறை: ICAI / ICWA / MBA
- கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பட்டப்படிப்பு / சான்றிதழ் பூர்த்தி.
சம்பள விவரம்:
* ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.90,000 முதல் 2,40,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.80,000 முதல் ரூ. 2,20,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.70,000 முதல் ரூ. 2,00,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* மேனேஜர் பதவிக்கு ரூ.60,000 முதல் ரூ.1, 80,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ.50,000 முதல் 1,60,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து ஒன்று, தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம் அல்லது திறன்/ எழுத்துத் தேர்வு உடன் குழு கலந்துரையாடல்/ நேர்காணல் ஆகியவற்றில் மூலம் தேர்வு செய்யப்படலாம்.
எப்படி விண்ணப்பிப்பது? மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள் https://www.hsccltd.co.in/career.html என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 29.09.2025.