பரபரப்பு.! தமிழகத்தில் கலைக்கப்பட்ட தேசிய கட்சி.! தலைமை அறிவிப்பு.!

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும். இந்நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது .

தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மேலும் இவர்களது கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் சமாஜ்வாடி பார்ட்டி ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணிக்குள் சில குளறுபடிகள் ஏற்பட்டாலும் மாநிலங்கள் தவிர்த்து கூட்டணி தொடரும் என ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த முக்கியமான சூழலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சியின் தமிழக பிரிவு கலைக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சிதம்பரத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வந்த சமாஜ்வாடி கட்சியின் தமிழக பிரிவு கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அந்தக் கட்சியின் தமிழ் பிரிவு தலைவர் இளங்கோ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உடனே செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

English Summary: Samajwadi party terminates its tamilnadu branch with immediate effect. The party Leader Akhilesh Yadav announced it today.

Read More: பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சிய டாடா குழும பங்குகள்… ரூ.365 லட்சம் கோடியாக உயர்வு.

Next Post

Power Tiller | பவர் டில்லர்களுக்கான மானியத்தொகை ரூ.1.20 லட்சமாக உயர்வு..!! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!!

Tue Feb 20 , 2024
தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : * நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு. * ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு. * ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் […]

You May Like