தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சிங்கிளாக இருந்த சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமந்தா தனது திருமண புகைப்படங்களை நேரடியாகப் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங் பைரவி கோவிலில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தின் போது, சமந்தா சிவப்புநிற டவையை அணிந்து இருந்தார். அதோடு தலையில் மல்லிப்பூ வைத்து, கையில் மருதாணி, கழுத்தில் நல்ல ஆபரணத்தை அணிந்து இருந்தார்.
திருமணத்தில் சமந்தா அணிந்து இருந்த மோதிரம் அனைவரின் கண்ணை பறித்தது. அந்த வைரமோதிரத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வைர மோதிரம் என்று நகை மதிப்பீட்டார்கள் கூறியுள்ளனர். இது ‘கொல்கொண்டா வைரம்’ என்றும், பழங்கால பாரம்பரியதை கொண்டது என்றும், முகாலயர்கள் காலத்தில் பல மன்னர்கள் அந்த மோதிரத்தை தான் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தனது காதல் மனைவி சமந்தாவிற்கு ராஜ் விலை மதிப்பில்லாத ஒரு பொருளை பரிசாக கொடுத்துள்ளார்.
Read more: இனி அனைத்து புதிய செல்போன்களிலும் இந்த செயலியை முன்கூட்டியே நிறுவ அரசு உத்தரவு! ஏன் தெரியுமா?



