‘I LOVE YOU’ சொல்வதெல்லாம் பாலியல் வன்கொடுமை கிடையாது..!! – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

bombay high court

பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியிடம் ஐ லவ் யூ என கூறிய 35 வயது நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி எனச் சொல்லி நாக்பூர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இருப்பினும், அந்த நபர் மேல்முறையீடு செய்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘ஐ லவ் யூ’ என சொல்வதற்குப் பின்னால் பாலியல் நோக்கம் இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு கூடுதல் ஆதாரமும் இல்லை எனக் கூறி அந்த நபரின் தண்டனையை ரத்து செய்தது.

நீதிபதிகள் கூறுகையில், “அந்தப் பெண் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது அந்த நபர் வழிமறித்து இருக்கிறார். பிறகு அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து, அவள் பெயரைக் கேட்டுள்ளார். பிறகு திடீரென ‘ஐ லவ் யூ’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் பதறிய அந்தப் பெண், அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடியுள்ளார். பிறகு தனக்கு நடந்த சம்பவத்தைத் தனது தந்தையிடம் கூறினாள். அதைத் தொடர்ந்தே இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வழக்கு பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் தொல்லை என்பதற்குள் வராது என்றார். மேலும் “ஒரு பெண்ணை தகாத நோக்கில் தொடுதல், ஆடைகளை களைதல், முறையற்ற செய்கை, முறையற்ற கருத்துகள் போன்றவையே பாலியல் செயல்களாகக் கருதப்படும் என்றார். தொடர்ந்து ஐ லவ் யூ என சொன்னதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இல்லை எனக் கூறி சிறை தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

Read more: உங்க கிட்ட இன்னும் ரூ.2,000 நோட்டுகள் இருக்கா..? – RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Next Post

மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!

Wed Jul 2 , 2025
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பாலம் மீது சென்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்படி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஒன்று பழுதடைந்து நின்ற நிலையில் பஸ்சை மீட்டுக்கொண்டு மீட்பு வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி […]
accident 1

You May Like