ஒருமுறை ‘I Love You’ சொல்வதெல்லாம் பாலியல் தொல்லை ஆகாது; அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

transgender andhra court 11zon

“ஐ லவ் யூ” என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் “ஐ லவ் யூ” என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், “ஐ லவ் யூ” என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

Readmore: இனி சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றலாம்!. ஆண்டுதோறும் 5000 கிலோ கிடைக்கும்!. புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம்!.

KOKILA

Next Post

இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.. சொந்தமாக கரன்சி இல்லை.. ஆனால் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யாத அளவுக்கு பணக்காரர்களாக வாழும் மக்கள்...

Tue Jul 29 , 2025
The people of this country, which has no airport and no currency of its own, live richly. Do you know which country that is?
Untitled design 2025 01 05T180719.424 11zon 2

You May Like