எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!! இந்த குறுஞ்செய்தி உங்களுக்கும் வந்துக்கா..? பெரும் ஆபத்து..!!

நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே போலியான அறிவிப்பு குறுஞ்செய்திகள், ஆசையை தூண்டும் தகவல்கள் என நூதன மோசடி தொடர்ந்து வருகிறது. இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார், கைது செய்தாலும், குற்றவாளிகள் சமூகத்தில் அதிகளவு நிறைந்துவிட்டதால் குற்றங்களை கட்டுப்படுத்த பெரும் சிரமம் ஏற்படுகிறது. சைபர் குற்றங்களை தடுக்க போலியான அறிவிப்புகள் தொடர்பான விஷயங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஸ்டேட் பேங்க் வங்கி பெயரில் குறுஞ்செய்தி பரப்பப்பட்டு வருகிறது. 

large sbi atm 57784

அந்த குறுஞ்செய்தியில் உங்களின் வங்கிக் கணக்கை பிளாக் செய்திருப்பதாகவும், அதனை சரி செய்ய பான் கார்டு எண்ணை பதிவேற்றம் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நூதன மோசடி என தெரிவித்துள்ள அதிகாரிகள், இவ்வாறு வரும் குறுஞ்செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், மேற்படி யாருக்கேனும் குறுஞ்செய்தி பெறப்பட்டால் report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்கு விரைந்து தகவலை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்படும். மேலும் https://cybercrime.gov.in/ என்ற இணையதள பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

கதவை திறந்த கங்கா..!! சட்டென்று நுழைந்த கும்பல்..!! துணிகளை அகற்றி நிர்வாண வீடியோ..!! பரபரப்பு சம்பவம்..!!

Thu Mar 23 , 2023
சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கங்கா (70). இவரது கணவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர். கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி மகனும், மருமகளும் வேலைக்கு சென்ற நிலையில், கங்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் கங்காவின் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். இதையடுத்து, கங்கா கதவை திறந்த உடனே […]
mobile video

You May Like