சூப்பர்…! இந்த 8 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! அரசு அறிவிப்பு…!

ஹரியானா மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2, 2022 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; பிவானி, ஜஜ்ஜார், ஜிந்த், கைதால், மகேந்திரகர், பஞ்ச்குலா, பானிபட் யமுனாநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதனால் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் பொது விடுமுறையாக இருக்கும். கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த தேதிகளில் மூடப்பட்டிருக்கும், இதனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையையும் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

TNPSC தேர்வர்களே... உங்களுக்கான தேர்வு முடிவுகள்...! வெளியான முக்கிய அறிவிப்பு...!

Sat Oct 29 , 2022
குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் […]

You May Like