இந்தியாவில் எத்தனையோ அழகான மலைகள் உள்ளன.. அப்படி ஒரு பசுமையான அடர்ந்த காட்டில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இந்த மலை, அதன் இயற்கை அழகுக்கு பிரபலமானது. இருப்பினும், இந்த அழகுக்கு பின்னால் பயங்கரமான ரகசியங்களின் கதை உள்ளது. ஆனால் இங்கு பேய்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. ஏனெனில் இரவில் இங்கிருந்து விசித்திரமான ஒலிகள் கேட்கின்றன! எனவே இந்த மலை சாந்தியடையாத ஆத்மாக்களின் வசிப்பிடமாக இருக்க முடியுமா? இந்தியாவின் இந்த மர்மமான மலை குறித்து உங்களுக்கு தெரியுமா?
பல மர்மமான ரகசியங்கள்
இந்த மலை ஒரு சாதாரண மலைவாசஸ்தலமாக தோன்றினாலும், அது பல நூறு ஆண்டுகளாக பல ஆச்சரியங்களையும் மர்மமான ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. அங்கு சென்ற சிலர் மாயமாக மறைந்துவிட்டனர்.. இரவில் விசித்திரமான ஒலிகள் கேட்கின்றன.. மேலும் சாந்தியடையாத ஆவிகள் அங்கு வாழ்கின்றன என்று கூறப்படுகிறது.. கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் காணப்படும் ஒரு பயங்கரமான மலை தான் இது.. இங்குள்ள மக்கள் இதை முட்டுகதேவன பெட்டா என்று அழைக்கிறார்கள். இது ஒரு மலை மட்டுமல்ல, இது ஒரு மர்மமான பயமுறுத்தும் இடமாகவும் உள்ளது..
தீய சக்திகளின் ஆதிக்கம்
இந்த மலைப் பகுதியைப் பற்றி எண்ணற்ற மர்மமான கதைகள் வலம் வருகின்றன. பசுமையான அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த மலையில் சில எதிர்மறை ஆற்றல்கள் மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பயங்கரமான பின்னணி
முட்டுகதேவன பெட்டா மலையின் மிகவும் ஆச்சர்யமான மற்றும் திகிலூட்டும் அம்சம் இங்கு காணாமல் போனவர்களின் கதைகள் தான்.. மலையேற்றத்திற்காக இ மலைக்குச் சென்ற சிலர் அல்லது ஆர்வத்தால் அடர்ந்த காட்டுக்குள் சென்ற சிலர் திடீரென மறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களின் தடயங்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை வெறும் தவறான சம்பவங்களா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் மர்ம சக்தி இருக்கிறதா என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
இரவில் நுழைய அனுமதி இல்லை
மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் இரவில் விசித்திரமான சத்தங்களைக் கேட்பதாக கூறுகின்றனர்.. சில நேரங்களில் யாரோ நடப்பது போல் காலடிச் சத்தங்கள் கேட்கின்றன என்றும், சில நேரங்களில் அழுவது, சிரிப்பது அல்லது யாரையாவது அழைப்பது போன்ற குரல்களை கேட்பதாகவும் கூறுகின்றனர்.. இவை காட்டு விலங்குகளின் சத்தங்களா அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் அறிகுறிகளா என்பது குறித்து உள்ளூர்வாசிகளிடையே குழப்பம் நிலவுகிறது. சிலர் மலையில் இதற்கு முன்பு பார்த்திராத விசித்திரமான விலங்குகளைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கதைகள் மலையின் மர்மத்தை மேலும் அதிகரிக்கின்றன.
முட்டுகதேவன பெட்டா மலை கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதி வனத்துறையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், வனப் பாதுகாப்பு விதிகள் இங்கு பொருந்தும். இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த மலை எந்தவொரு பேய் இடமாகவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைகள் மற்றும் கதைகள் காரணமாக இது மர்மமான இடமாகவே கருதப்படுகிறது…
காணாமல் போனவர்களின் பல கதைகள், விசித்திரமான ஒலிகள் மற்றும் சில நாட்டுப்புற நம்பிக்கைகள் இந்த மலையை ஒரு தனித்துவமான மர்ம இடமாக மாற்றியுள்ளன. இது வெறும் உள்ளூர் கதையா அல்லது இதற்குப் பின்னால் தீர்க்கப்படாத உண்மை இருக்கிறதா என்பது இன்று வரை ஒரு மர்மமாகவே உள்ளது. முட்டுகதேவன மலை என்பது இயற்கையின் அதிசயத்தையும் மர்மத்தின் பயத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான இடம் என்றும் சிலர் கூறுகின்றனர்..