சுட்டெரிக்கும் கோடை வெயில்..!! அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர்..!! மக்கள் மகிழ்ச்சி..!!

‘கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கவும் தடையின்றி தண்ணீர் வழங்கவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்‌ஷேனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு எடுக்கப்போகும் சூப்பர் முடிவு..!!

Chella

Next Post

அடடே..!! இனி இவ்வளவு ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

Sat Apr 27 , 2024
இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால், செல்ல வேண்டிய இடத்திற்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், கடந்த 2015 ஏப்ரல் மாதம் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் […]

You May Like