சென்னையில் ஒரேநாளில் 34 பார்களுக்கு சீல் – வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை

சென்னை புறநகர் பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மது பான கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபான பார்களுக்கு சீல் வைக்கும் பணிகள் இன்று மதியம் முதல் தொடங்கி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் 27 பார்களுக்கும் பல்லாவரத்தில் 7 பார்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பல பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் மேலும் பல பார்கள் மூடப்படும் என்று தெரிகிறது

Baskar

Next Post

ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு இல்லை என்று அர்த்தமல்ல- அண்ணாமலை

Fri Jun 2 , 2023
ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்று கோவலத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அண்ணாமலை, இலக்கு 2024: தெற்கில் வெல்லப்போவது யார்? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் பேசினார். அப்போது “ராகுல் காந்திக்கு வேலையில்லை என்பதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோருமே வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கூறுவது […]
’இரண்டு நாட்களில் இரண்டு லாக்கப் மரணங்கள்’..! அண்ணாமலை பரபரப்பு ட்வீட்..!

You May Like