fbpx

இந்தியா முழுவதும் PM SHRI பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று நேற்று மார்ச் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் …

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதனையடுத்து, மும்பையில் I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) முடிவடையும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் …

அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் என்ற …

சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை கடந்த சில வாரங்களுகு முன் ரூ.500-க்கு விற்பனையானதால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்தது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.500-க்கு …

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான நாட்களில் இருக்கும் கட்டணமே பண்டிகை காலங்களிலும் உள்ளது என்பதால் அந்த காலக்கட்டத்தில் அரசுப் பேருந்துகளில் அதிகம் …

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சிறு கட்சிகள் பலவும் இந்த இரண்டு கூட்டணிக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. …

மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணத்தை டான்ஜெட்கோ குறைத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் கம்பி, மின் பாதை, மின் மாற்றி மற்றும் மின் சாதனைகளை மாற்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பரிசீலனை செய்த அரசு, தற்போது முக்கிய …

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் அறிவிக்க உள்ளது.

இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலங்கள் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர …

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதியை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தல் பற்றிய அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக …

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (26). இவரும் 19 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். …