செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிரும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி எடுத்துக் கொண்டது போல காணப்படும் AI எடிட் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த AI வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி, அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதள பயனாளர்களிடமும் கவனம் ஈர்த்துள்ளது. அவரது பதிவில், “நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல்…” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு வைரலான நிலையில், ஓரு பயனர் “AI -ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா? சார்” என்று கிண்டல் செய்துள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,, “நண்பரே மன்னிக்கவும் தப்புதான்” என்று பதிவிட்டுள்ளார். இருந்த போதிலும் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Read more: 16 பேர் பலி.. பயணிகள் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. இந்தோனேசியாவில் சோகம்..!



