அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்றும் கூறியிருந்தார்.. 10 நாட்களுக்குள் இபிஎஸ் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒன்றிணைக்க தாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியிருந்தார்..
இந்த நிலையில் சசிகலா செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் உண்மையான அதிமுக தொண்டர் என்பதை நிரூபித்துவிட்டார்.. பல்வேறு நெருக்கடியான காலக்கட்டத்திலும் செங்கோட்டையன் நின்றுள்ளார்.. செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை நிரூபித்துள்ளார்.. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் கருத்து.. தமிழக மக்களின் கருத்தும் தான்..
நானும் அதை தான் வலியுறுத்துகிறேன்.. செங்கோட்டையனை போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, திமுக என்ற தீய சக்தி எந்த விதத்தில் முயற்சி செய்தாலும், அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் நிறைவேறது.. ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்..” என்று தெரிவித்துள்ளார்..