எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவர்களில் செங்கோட்டையன் முக்கியமானவர்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தவர்.. அதிமுகவில் கிளை செயலாளர், மாவட்ட செயலாளர், அதிமுக ஆட்சியில் அவை முன்னவர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.. அதிமுக வரலாற்றில் 9 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான வெகு சிலரில் செங்கோட்டையனும்.. ஈரோட்டில் அதிமுகவின் முகமாகவும் செங்கோட்டையன் வலம் வருகிறார்.
சமீபத்தில் அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தார்..
இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் அதிமுக இணைப்பு என்பது மீண்டும் கேள்விக் குறியானது.
ஆனால் கடந்த 3-ம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
மேலும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.. இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.. எனினும் அதிமுகவை ஒன்றிணைக்க போராடுவேன், தன்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்று செங்கோட்டையன் கூறி வந்தார்..
இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.. நாளை மறு நாள் அதாவது வரும் 27-ம் தேதி செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.. காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு பின்னர் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது..
தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி வழங்குவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.. பண்ரூட்டி ராமச்சந்திரன் மூத்த வழிகாட்டியாக இருந்து அதிமுக, தேமுதிகவை எப்படி வழிநடத்தினாரோ அதே போல் செங்கோட்டையன் தவெகவின் வழிகாட்டியாக முக்கிய ஆலோசகராக இருப்பார் என்று கூறப்படுகிறது.. அவருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. அதிமுகவில் அவர் மீண்டும் இணைய முடியாது என்பதால் தவெகவில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.. பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று..
Read More : எடப்பாடியை காலி செய்ய தவெக-வில் இணையும் அதிமுக மாஜி..? வெளியான பரபர தகவல்..!



