“ விஜய் கட்சியில் செங்கோட்டையன் 6 மாதம் கூட தாங்க மாட்டாரு.. இப்பவே கட்டம் கட்ட தொடங்கிருப்பாங்க” அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்..!

vijay sengottaiyan

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவர், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார்..


இதை தொடர்ந்து இன்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து பேசினார்.. தவெகவில் அவர் இணைய உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..

தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான அதிகாரம் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தவெகவின் முன்னாள் நிர்வாகியும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன் செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்து பேசி உள்ளார்.. அப்போது “  செங்கோட்டையனால் தவெகவில் 6 மாதம் கூட அவரால் தாக்குபிடிக்க முடியாது.. ஏனெனில் தவெக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே கட்சியில் மூத்த தலைவர்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்பது தான் ஜான் ஆரோக்கிய சாமிக்கும் புஸ்ஸி ஆனந்திற்கும் உள்ள ஒரே நோக்கம்.. செங்கோட்டையன் மாதிரியே எல்லா கட்சிகளில் இருந்து ஆட்கள் வந்தனர்.. ஆனால் அவர்கள் யாரையும் புஸ்ஸி ஆனந்தும், ஜான் ஆரோக்கிய சாமியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை..

இன்று செங்கோட்டையனுக்கும் அதே நிலைமை தான்.. அதை தாண்டி ஆதவ் அர்ஜுனா மூலம் விஜய்யிடம் இந்த விஷயத்தை கொண்டு போனதால் தான் விஜய் இதை ஏற்றுக்கொண்டு செங்கோட்டையனுக்கு பொறுப்பு கொடுக்கலாம் என்று விஜய் முடிவு செய்துள்ளார்.. செங்கோட்டையனுக்கு பொது செயலாளர் பதவி தான் விருப்பமானதாக இருந்துள்ளது.. ஆனால் விஜய், புஸ்ஸி ஆனந்த் தான் பொதுச் செயலாளர், உங்களுக்கு அமைப்பு பொது செயலாளர் பதவியை கொடுக்க உள்ளனர்.. தவெகவின் நிர்வாகக் குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் ஒட்டுமொத்த கட்சியும் புஸ்ஸி ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும் என்ன சொல்கிறார்களோ அது படி தான் நடக்கும்..

அரசியலே தெரியாத இந்த இருவருக்கும் செங்கோட்டையனின் மதிப்பு தெரியாது.. எனவே செங்கோட்டையனை எப்படி கட்டம் கட்டி வெளியே அனுப்பலாம் என்ற செயல்முறைய் இப்போதே தொடங்குவார்கள்.. இன்னும் 6 மாசத்தில் ஏண்டா இந்த கட்சிக்குள் வந்தோம் என்று செங்கோட்டையன் யோசிப்பார் என்று நான் அடித்து சொல்கிறேன்.. ஏனெனில் இவரை போன்ற ஒரு பழுத்த அரசியல்வாதியின் மதிப்பு தவெகவின் அடிமட்ட தொண்டர் முதல் தலைவர் வரை யாருக்கும் தெரியாது.. எனவே செங்கோட்டையனும் இதை ஒரு நாள் உணர்வார்..” என்று தெரிவித்தார்..

Read More : Breaking : விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்! தமிழக அரசியலில் பரபரப்பு..!

RUPA

Next Post

“எந்த தார்மீக உரிமையும் இல்லை..” ராமர் கோவில் நிகழ்வு குறித்த கருத்துக்கு பாகிஸ்தானை சாடிய இந்தியா..!

Wed Nov 26 , 2025
அயோத்தி ராமர் கோவிலில் நடந்த கொடி ஏற்ற விழா குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாக கண்டித்துள்ளது. சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய நீண்ட வரலாறு கொண்ட பாகிஸ்தானுக்கு, பிறரைப் பற்றி பாடம் புகட்ட எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது, “பாகிஸ்தான் போலியான மதசார்பற்ற போதனைகளை வழங்குவதற்குப் பதிலாக, […]
modi ayodhya 2

You May Like