தமிழகத்தையே உலுக்கிய சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி உட்பட மூன்று முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் அதிபரான தொழிலதிபர் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவருக்கு உடந்தையாக செயல்பட்ட புரோக்கர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரை சென்னை போலீஸார் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் அடுத்தடுத்த விசாரணையின் தொடர்ச்சியாக, வீரமணியின் தனி உதவியாளர் கணேசன் என்பவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வருவதை தடுக்கும் வகையிலும், குற்றத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளான தொழிலதிபர் வீரமணி, இடைத்தரகர்களாக செயல்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : ஆசிய விளையாட்டு!. கடைசி 49 வினாடியில் திரில் கோல்!. பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் நுழைந்தது இந்திய ஹாக்கி அணி!



