குலுங்கும் மதுரை: தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி… வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மிகவும் பிரசித்திப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. தினம் ஒரு திருவிழாக் கோலம் பூண்டு மதுரை மாநகர் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாண கோலத்தில், பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் மதுரை முக்கிய வீதிகளில் வீதிவுலா வந்தனர். மதுரையில் கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் தேரில் மீனாட்சி அம்மனும், சுந்தேரஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து, கோயிலில் இருந்து கள்ளழகர், தனது சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரை நோக்கி புறப்பட்டார். அவரை மதுரை மாநகருக்குள் வரவேற்க எதிர்சேவை நிகழ்வு நிகழ்ந்தது.

பக்தர்கள் தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வணங்கினர். தங்கை மீனாட்சி திருமணம் முடிந்த செய்தியறிந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்கு நடைபெற்றது. வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வாக வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இதை தரிசிப்பதற்காக லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். எனவே மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை 24-ம் தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளது.

Kathir

Next Post

"மோடி எதிர்ப்பு அலை" நாடு முழுவதும் வீச தொடங்கி விட்டது...!

Tue Apr 23 , 2024
முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய ‘மோடி எதிர்ப்பு அலை’, நாடு முழுவதும் வீசுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில்; இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை ராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்து, 2006இல் அன்றைய […]

You May Like