கூட்ட நெரிசல், தூய்மை மற்றும் உணவு தரம் போன்ற பிரச்சனைகளில் அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய ரயில்வே, இப்போது ஒரு புதிய கவலையை எதிர்கொள்கிறது. ரயில்களின் பிரீமியம் பெட்டியில் இருந்து பொருட்களைத் ஒரு குடும்பத்தினர் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இது தொடர்பான ஒரு வைரல் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.
புருஷோத்தம் எக்ஸ்பிரஸில் பயணிகள் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.. எனினும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயன்றதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது..
@bapisahoo என்ற பயனர் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “புருஷோத்தம் எக்ஸ்பிரஸின் முதல் ஏசியில் பயணம் செய்வது பெருமைக்குரிய விஷயம். ஆனால் இன்னும் பயணத்தின் போது கூடுதல் வசதிக்காக வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகளைத் திருடி வீட்டிற்கு எடுத்துச் செல்லத் தயங்காத மக்கள் உள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்…
இந்த வீடியோ 141,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.. இணையவாசிகள் இந்த வீடியோ குறித்து தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்..
பயனர் ஒருவர் “மன்னிக்கவும், ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு குடிமை உணர்வு இல்லை. அவர்கள் வாகனம் ஓட்டும்போது, பேசும்போது, பல்வேறு காரணங்களுக்காக வரிசையில் நிற்கும்போது.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் “எவ்வளவு வெட்கக்கேடானது மற்றும் அருவருப்பானது” என்று பதிவிட்டுள்ளார்..
Read More : மிகப்பெரிய சைபர் தாக்குதல்.. லண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் விமான சேவை பாதிப்பு! பயணிகள் தவிப்பு!



