லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை சாப்பிட்டு வைரலாகிய இன்ஸ்டா பிரபலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்த 24 வயதான இளம்பெண் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார், அதாவது, அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து அப்லோடு செய்து வைரலாகினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார். குவா பியூட்டி’ என்ற அவரது கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
இருப்பினும், ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை உட்கொண்டதற்காக அவர் மீது சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரது மரணச் செய்தியை குடும்பத்தினரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். திடீர் உடல்நலக் குறைவால் அவர் மே 24, 2025 அன்று இறந்ததாக அவர்கள் அவர்கள் வெளியிட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.