மதம் மாறாத ஆத்திரத்தில் லக்னோ லுலு மாலில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், லக்னோவில் உள்ள லுலு மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் அயோத்தியில் உள்ள கோசியானா பஹர்கஞ்ச் ராம்நகரைச் சேர்ந்த மேற்பார்வையாளராக பர்ஹாஸ் (Farhaz) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய வழக்கில் பர்ஹாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஊழியர் அளித்த புகாரில், சுஷாந்த் கோல்ஃப் நகர காவல் நிலைய போலீசார் பர்ஹாஸை கைது செய்தனர். புகாரில், ஃபர்ஹாஸ் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்து வைத்துள்ளதாகவும் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறுமாறு அவர் வற்புறுத்தியதாகவும், மறுத்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், போலீசார் விசாரணையில், பர்ஹாஸ் ஏற்கனவே தனது வீட்டுக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்துள்ளார் என்றும், இதுமட்டுமல்லாமல், ஃபர்ஹாஸ் தன்னை உடல் ரீதியாகத் தாக்கி சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று காவல் ஆய்வாளர் உபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Readmore: பெண்கள், முஸ்லீம் ஆண்களிடம் அதிகளவில் ஈர்க்கப்படுவது ஏன்?. இதுதான் காரணம்!. ஆய்வில் ஆச்சரிய தகவல்!.



