ஷாக்!. ஃப்ரிட்ஜில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 9 பேரின் உடல்கள்!. நடுங்க வைக்கும் பின்னணி!. மரண தண்டனை நிறைவேற்றம்!

japan twitter killer 11zon

ஜப்பானில் 9 பேரை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஜாப்பானை சேர்ந்த ஷிரைஷி என்பவர், தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஷிரைஷி இதுவரை 8 பெண்கள், ஒரு ஆண் ஆகிய 9 பேரை கொலை செய்து அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்துள்ளார்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்களை, பாலியல் ரீதியாகவும் ஷிரைஷி துன்புறுத்தியிருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார். இதையடுத்து, 2017ல் போலீசார் ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அப்போது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நபர் டோக்கியோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Readmore: #Breaking : சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜாமீன் மனு தள்ளுபடி.. பூவை ஜெகன்மூர்த்தி கைதாகிறாரா?

KOKILA

Next Post

அமெரிக்கா மீது நேரடி தாக்குதல்!. கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய டிரம்ப்!. இதுதான் காரணம்!.

Sat Jun 28 , 2025
அமெரிக்கா மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்ததை தொடர்ந்து, வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் , பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான […]
2f2ac4021f8796d8d097c5724f3e2542

You May Like